செய்திகள்

சிகரட்டுக்கு தட்டுப்பாடு : இருக்கும் இடங்களில் 40 ரூபாவுக்கும் மேல் விற்பனை

நாட்டில் சிகரட்டுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகரட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான வரிகளை அதிகரிக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே சிகரட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது புகையிலை பொருட்கள் மீது 15 வீத வற் வரியை அறவிடவும் மற்றும் சகல வகை புகையிலை உற்பத்தி பொருட்கள் மீதான உற்பத்தி வரியை 5 ரூபாவினால் அதிகரிக்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்படி சிகரட்டுகளின் விலைகள் 45 ரூபாவுக்கும் மேல் உயரும் என தகவல்கள் வெளியானதை தொடர்ந்து வர்த்தகர்கள் அவற்றை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் சிகரட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். -(3)