சிகரட் விற்பனையில் புது சட்டம் : முழு பக்கற்றாகவே விற்க வேண்டும்?
சிகரட் விற்பனை தொடர்பாக புதிய சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி கடைகளில் ஒவ்வொரு சிகரட்டுகளாக விற்பதனை தடை செய்து முழு பக்கற்றாக மாத்திரம் கொள்வனவு செய்யும் வகையில் சட்டமொன்றை அமுல் படுத்துவது தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சுகதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சிகரட் பக்கற்றுகளை வெள்ளை நிரத்தில் மாத்திரம் வைத்திருப்பதற்கும் அமைச்சர் யோசனைகளை அமைச்சரவைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.-(3)




