செய்திகள்

சிங்கம் 4ஐ தயாரிப்பேன் இதற்கு முன் சாமி 2 வரும் : இயக்குநர் ஹரி

5 முதல் 6 ஆண்டுகள் கழித்து தான் ‘சிங்கம்’ 4ம் பாகம் தயாராகும். உடனடியாக தயாராகாது என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘சி 3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அவரிடம் 4ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அச்சந்திப்பில் ஹரி பேசிய போது” 5 முதல் 6 ஆண்டுகள் கழித்து தான் ‘சிங்கம்’ 4ம் பாகம் தயாராகும். உடனடியாக தயாராகாது. தற்போது நாங்கள் இருவருமே மற்றொரு படவரிசையில் இணையவுள்ளோம். ‘சாமி 2’ தான் எனது அடுத்த படமாக இருக்கும். அதைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவோடு இணையவுள்ளேன்.
கடந்த 12 ஆண்டுகளில் 5 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அதில் ஒவ்வொரு படத்திலும் 120 நாட்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் இருவருக்கும் ஒவ்வொருவரை பற்றித் தெரியும்” என்று தெரிவித்துள்ளார் ஹரி. -(3)