செய்திகள்
சினிமாவில் அறிமுகமாகும் பிரபல சின்னத்திரை நடிகர்
திருமுருகன் இயக்கிய மெட்டிஒலி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் முனீஸ்ராஜா. இவர் குலதெய்வம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது இவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளன. லொள்ளு சபா ஜீவா நடிக்கும் ஆரம்பமே அட்டகாசம், யாகன், குத்தூசி, டாலர் தேசம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறாராம். இவர் சின்னத்திரையில் அறிமுகமானபோது பெரிய திரை வடிவேலுதான் இவருக்கு ரோல் மாடலாம்.
எதிர்காலத்தில் சினிமாவில் பெரிய காமெடியனாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது என்கிறார் முனீஸ்ராஜா.
N5




