செய்திகள்

உலக அழகிக்கு வாழ்த்து சொன்ன வரலக்ஷ்மி

நடிகை வரலக்ஷ்மி நடிகர் விஷாலுடன் காதல் விஷயங்களில் அதிகம் பேசப்பட்டவர். குறிப்பிட்ட படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வரும் இவர் சில பொது நல விஷயங்களையும் செய்து வருகிறார்.

நண்பர்களோடு பார்ட்டி, ட்ரீட் என அடிக்கடி கலந்துகொண்டு புகை படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்.

சில நாட்கள் இவரையும் விஷாலையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை என சில ரசிகர்களின் கவலை.

தற்போது இவரின் நண்பரான ரோசெல்லே ராவ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் இந்திய அளவில் அழகி போட்டிகளிலும், 2012 ல் உலகளவில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவருக்கு வாழ்த்து தெரிவித்து வரலக்ஷ்மி ட்விட்டரில் புகை படங்களை பகிர்ந்துள்ளார்.

N5