செய்திகள்

ஒரே கதையில் விஜய் சேதுபதியும், சிம்புவும்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் நம்பிக்கையான நாயகன் விஜய் சேதுபதி. இவர் தற்போது வா ரத்னசிவா இயக்கத்தில் லட்சுமி மேனனுடன் றெக்க என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதையும், சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் கதையும் ஒரே மாதிரியான கதை என ஒரு வதந்தி பரவி வருகிறது.

புதிய கதையெல்லாம் ஒன்றும் இல்லை கதாநாயகனையும், நாயகியையும் ஒரு கும்பல் துரத்திக்கொண்டே இருக்கும், அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பது தான் அந்த கதையாம்.

ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு கோணங்களில் பயணிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

N5