செய்திகள்

ஓஸ்கர் வென்ற ஈரானிய இயக்குநர் டிரம்ப் மீது கடும் பாய்;ச்சல்

ஓஸ்கர் விருதுவழங்கும் நிகழ்வில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை ஈரானிய திரைப்படமான த சேல்ஸ்மன் வென்றுள்ள அதேவேளை அதன் இயக்குநர் அஸ்கர் பர்காடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயண தடையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஓஸ்கர் நிகழ்வை புறக்கணித்துள்ள இயக்குநர் டிரம்ப் உலகை அமெரிக்கா அதன் எதிரிகள் என இரண்டாக பிளவுபடுத்துகின்றார்,இது ஆபத்தானது அச்சமூட்டும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
எனது நாட்டவர்களிற்கும், மேலும் ஆறு நாட்டவர்களிற்கும் தடையை விதித்து அமெரிக்க அவர்களை அவமானப்படுத்தியுள்ளது-நான் அந்த ஏழு நாடுகளை சேர்ந்த மக்கள் மீதான மதிப்பு காரணமாகவே அமெரிக்காவில் இடம்பெறும் ஓஸ்கர் நிகழ்வை புறக்கணித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.