செய்திகள்

நல்ல திரைப்படம் எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்த சேரன்

இயக்குனர் சேரனின் இயக்கத்தில் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படம் தயாராகி இருந்தது. சுமார் 250 திரையரங்குகளில் தெலுங்கில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான இப்படத்தில் சர்வா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வெற்றியை கண்ட இப்படம் தமிழில் ஜுலை மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

நல்ல திரைப்படம் எப்போதும் வெல்லும் என்பதை சேரனின் படம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஏற்கனவே DVDகளில் வெளியிடப்பட்டிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள், இது நல்ல படம், இன்னும் நிறைய பேர் பார்க்க வேண்டும் என்று கூறிவருகின்றனராம்.

N5