பிரச்சனைக்கு தற்கொலை தீர்வாகுமா? உணர்த்தும் EMI
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் சிலர் சின்ன பிரச்சனை என்றாலும் அதை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலை கொள்வதில்லை. இதை உணர்த்தும்விதமாக தற்போது வெளியாகிவருகிறது EMI என்ற சின்னத்திரை தொடர். இது ஆபிஸ் சீரியல் போன்று அலுவலகத்தில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய தொடர் தான்.
இதில் ஐ.டியில் வேலை பார்த்த நபர் ஒருவருக்கு திடிரென வேலை போக அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்ய முயல்கிறார். இதில் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதுமாக செயலிழந்து வீல்சேரில் அமர்கிறார்.
குடும்பமும் மிகவும் சிரமப்படுகிறது. மேலும் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதற்காக இவர்மீது வழக்கும் போடுகிறார். வேலை போனதற்காக அவசரப்பட்டிருக்க வேண்டாமென தற்போது வருந்தி வருகிறார்.
N5