பிரபாஸ் தான் ஆணழகன் ராணா என் அண்ணன்-அனுஷ்கா அதிரடி
ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ளனர். பாகுபலி 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதில் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது
அனுஷ்கா, பிரபாஸ் இருவருக்கும் 30 வயதை தாண்டினாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திரையில் ஜொலிக்கும் ஜோடி நிஜ வாழ்வில் இணைந்தால் அருமையாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இருவரும் காதல் செய்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.இதை சம்பந்தப்பட்ட இருவருமே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம் பிரபாஸ், ராணா இருவரில் யார் ஆணழகன் என கேட்கப்பட்டது. யாரை அனுஷ்கா தேர்ந்தெடுப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, பிரபாஸ் தான் ஆணழகன் என அசால்ட்டாக சொல்லிவிட்டார் அனுஷ்கா.
ராணா என்னை எப்பொழுதுமே பிரதர் என்று தான் அழைப்பார். பதிலுக்கு நானும் அவரை பிரதர் என்றே அழைப்பேன் என்று அனுஷ்கா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா பாகுபலி படங்களுக்கு முன்பாக பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவருடன் நடிக்க தயார் என்று அனுஷ்கா கூறியுள்ளார்.(15)