செய்திகள்

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு – பாக்யராஜுக்கு வலுக்கும் எதிர்ப்பு

சமீபத்தில் நடைபெற்ற ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில் தவறு நடக்க பசங்க மட்டும் காரணம் இல்லை. உங்கள் பலவீனத்தை அவன் சரியாக பயன்படுத்திக்கொண்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டீர்கள், அதுதான் பெரிய தவறு.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என கூறிய பாக்யராஜ், பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்குத்தான் போன் வாங்கி கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்’ என பேசினார்.

பாக்யராஜின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வசிரெட்டி பத்மா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியிருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இயக்குநர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.(15)