செய்திகள்

ரெமோ படத்திற்கு எதிராக வழக்கு

தமிழ் சினிமாவில் படங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது, அப்போது தான் வரிவிலக்கு கிடைக்கும்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ, தமிழ் வார்த்தை இல்லை, அதனால் இந்த படத்துக்கு கொடுத்துள்ள வரிவிலக்கை ரத்து செய்ய கோரி பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி சிவஞானம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரெமோ என்ற சொல், ரெமிங்டன் என்ற சொல்லின் சுருக்கம் என்றும், இது லத்தீன் சொல் எனவும், தற்போது, ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் இச்சொல் அதிகம் புழக்கத்தில் இருப்பதாகவும், எனவே, வரி விலக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் இருந்து கால அவகாசம் கேட்கப்பட்டதால், நீதிபதி வழக்கை வரும் நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

N5