செய்திகள்

சின்ன விஷயத்துக்காக சமந்தா கொடுத்த கடும் தண்டனை

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார். இடையில் காதலிலும் கமிட்டானதால் மிக பிசியாக இருக்கிறார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் இவரது திருமணம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தான் வைத்திருந்த விலை உயர்ந்த மோதிரத்தை தொலைத்து விட்டாராம்.

அதை அவர் தன் காரில் தான் வைத்திருந்தாராம். அதனால் வீட்டில் வேலை செய்யும் உதவியாளர்களில் யாரோ ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும் என சந்தேகித்தார்.

எப்போதும் தனது உதவியாளர்களை தன் குடும்பத்தார் போல நடத்தும் சமந்தா எப்படி எல்லோரையும் விசாரித்து கண்டுபிடிப்பது. ஒரு வேலை தவறாய் போனால் தவறு செய்யாதவர் மனம் பாதிக்கப்படும் என யோசித்தாராம்.

இதனால் ஒரேடியாக உதவியாளர்கள் அனைவரையுமே வேலையிலிருந்து நிறுத்திவிட்டாராம். தற்போது இந்த தகவல் பரவிவருகிறது.

N5