செய்திகள்

சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சீனா?

சிஎன்என்–

சீனாவிற்கு சிம்பாப்வேயின் இராணுவதளபதியொருவர் விஜயம் மேற்கொள்வதை உலகநாடுகள் ஓருபோதும் வழமைக்கு மாறான விடயமாக பார்க்கப்போவதில்லை.
ஜிம்பாப்வேயில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடு சீனா என்பதுடன் ரொபேர்ட்முகாபே அரசாங்கத்தின் நெருங்கிய சகாவாகவும் சீனா காணப்படுகின்றது.
ஆனால் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட சிம்பாப்வேயின் இராணுவதளபதி கொன்சன்டினோ சிவெங்கா அந்த நாட்டின் பல அதிகாரிகளை சந்தித்து விட்டு நாடு திரும்பிய பின்னரே சிம்பாவேயில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது- அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இதன் காரணமாக சிம்பாப்வே இராணுவதளபதியின் சீனா விஜயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் முகாபேயை பதவி கவிழ்ப்பதற்காக சீனாவின் ஆதரவை இராணுவதளபதி கோரினார் என்ற ஊகங்களும் வெளியாகியுள்ளன.

Zimbabwean President, Robert Mugabe, meets with Defence Forces Generals in Harare at State House , Sunday, Nov, 19, 2017. Members of the ZANU PF Central committee fired Mugabe as chief and replaced him with dismissed deputy President, Emmerson Mnangagwa on Sunday. (AP Photo)

)

சீனாவிற்கும் சிம்பாப்வேயிற்கும் இடையிலான உறவுகள் 1970களில் இருந்து நெருக்கமானவையாக காணப்படுகின்றன.சிம்பாப்வேயின் சுதந்திரப்போராட்டத்தின்போது முகாபேயின் கெரில்லாப்படையினருக்கு சீனா இரகசியமாக ஆயுதங்களை வழங்கியிருந்தது.
அதற்கு பின்னரும் சீனா அந்த நாட்டிற்கு பெருமளவு நிதியுதவியை வழங்கி வந்ததுடன் அரசியல் ஆதரவையும் வழங்கி வந்துள்ளது.மேலும் சீனா சிம்பாப்வேயின் பல அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்துள்ளது
முகாபே அரசாங்கத்தி;றகு சீனா தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிவந்தது சிம்பாப்வேயின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக சகா சீனாஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
இதன் காரணமாக சீனா சிம்பாப்வே அரசியல் நெருக்கடிக்குள் சிக்குப்படுவதை விரும்பாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் சிம்பாப்வேயின் முகாபே பதவி கவிழ்க்கப்பட்ட விவகாரத்தில் சீனாவின் பங்களிப்பு என்ன சீனாவிற்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டதா என்பதை அறிவதற்கான வழிவகைகள் எதுவும் இல்லை என அனேக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
பதவி கவிழ்ப்பு முன்னர் இராணுவதளபதி சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை ஏதோ நடந்திருக்கின்றது என்பதை புலப்படுத்தியுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கி;ன்றனர்

இந்த வருட ஆரம்பத்தில் முகாபே சீனாவிற்கு விஜயம்மேற்கொண்டிருந்தார்.அவரை சந்தித்த சீனா ஜனாதிபதி தனது நாடு பழைய நண்பர்களை ஓருபோதும் கைவிடாது என குறிப்பிட்டிருந்தார்
இதேவேளை சீனாவின் அரசாங்க ஆதரவு நாளேடான குளோபல்டைம்சில் எழுதியுள்ள ஆய்வாளர் ஓருவர் சிம்பாப்வேயில் சீனாவின் முதலீடுகளின் நீண்ட கால பாதுகாப்பு குறித்து சீனாவில் கரிசனைகள் உருவாகியிருந்தன என தெரிவித்துள்ளார்.
முகாபேயின் கொள்கைகள் காரணமாக சீனாவின் முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன சில திட்டங்களை மூடவேண்டிய அல்லது வேறு நாடுகளிற்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .இதன் காரணமாக சீனா நிறுவனங்கள் பாரிய பாதிப்பை சந்தித்துள்ள என அவர் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வேயில் ஆட்சி மாற்றம் சீனாவிற்கு சாதகமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.