சிம்புவின் வாலு வெளியிடத் தடை
சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் வாலு படத்துக்கு தடை கோரி மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். ஆகவே எங்களைத் தவிர வேறு ஒருவரு மூலமாக வாலு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மேஜிக் ரேஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போது வாலு தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை வரும் 13-ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை வாலு படம் வெளியிட தடைவிதித்தும், தற்போதைய நிலையிலேயே நீடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
சிம்பு சினி ஆர்ட்ஸ் நான்கு ஆண்டுகளாக என இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆண்ட்ரியாவும், சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது குறிப்பிடத்தக்கது.




