சிம்புவுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்னதான் நடக்கிறது?
குழந்தை நட்சத்திரமாக அப்பா டி.ராஜேந்திரனின் படத்தில் அறிமுகமானவர் சிம்பு. துள்ளலான நடிப்பு, துறு துறு என ஆக்ட்டிங், விறு விறுப்பான டயலாக், வேகமான நடனம் என எல்லோரையும் கவர்ந்தார்.
வேகமாக வளர்ந்து சினிமாவில் தனி இடத்தை பிடித்தவர். நேரம் யாரைத்தான் விட்டு வைக்கும் என்பது போல இவரையும் சில வருடங்களாக பிடித்து ஆட்டுகிறது.
படத்தில் நடிப்பதில் சிக்கல், நடித்தாலும் வெளியிடுவதில் சிக்கல், வாய் தகராறு என இவரை ஆற்றி செய்திகள் வரத்தான் செய்கின்றன.
முன்பு நயன்தாரவுடன் நெருக்கமாக இருந்த காதல், பின் சில நாட்களில் இடைவெளியானது. அடுத்து சிம்பு 2012 இல் வாலு படத்தில் நடிக்க அதிலும் பிரச்சனை ஏற்பட்டு தள்ளிப்போய் பின் 2015 இல் வெளிவந்தது.
அந்த படத்திலிருந்து ஹன்சிகாவுடன் காதல் என்று ஆனபின்னர் அதுவும் சில நாட்களில் மறைந்து போனது.
பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவுடன் சிம்பு நடிக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்டு பின் தள்ளிப்போய் கேள்விக்குறியாகி பின் ரிலீஸ் ஆனது.
திடீரென்று நடிகர் சங்க தேர்தலின் போது ராதிகா சரத்குமாருடன் இணைந்து இவர் பேசிய ஆவேச பரப்புரை எல்லோரையும் அதிர்ச்சியாக்கியது. எதிர் அணி விஷாலுக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு மோதல்கள் இருந்தது.
கொஞ்சம் நன்றாக போய்க்கொண்டிருந்த போது திரென்று அனிருத்துடன் இவருக்கு பீப் பிரச்சனை. எதிர்ப்பு, வழக்கு, காவல் என அலைந்து பின் சரியானது.
பின் இவர்கள் இப்போது பிரச்சனை, பின் உடனே ஒன்று கூடிவிடுவார்கள் என எல்லோரும் கணித்து வைத்திருப்பது கௌதம் மேனன் மற்றும் சிம்புவைதான்.
அவரது இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா ஷட்டிங் திடீரென்று நிறுத்தப்பட்டு பின் பின் எடுக்கப்பட்டு படமும் முடிந்து பாடல் ஷூட்டிங் பிரச்சனை.
அதுவும் முடிந்து படம் தயாரானாலும் வெளியிடுவதில் லேட் என்று போய்க்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற அவர், அங்கு ஒரு சாமியாரை சந்தித்து நான் சினிமாவை விட்டுவிட்டு சாமியாராகி விடலாம் என்று நினைக்கிறன்.
சரிவர வாய்ப்பில்லை, படங்களிலும் எதாவது சிக்கல், அதனால் தான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன் என்று சொன்னதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அந்த சாமியாரோ நான் இப்படி வரவேண்டும் என்பது எனது கர்மா வினை. சினிமாவில் நீங்கள் இருக்க வேண்டும் என்பது உங்களது கருமவினை என்று கூறியதால் சிம்பு மனம் மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
AAA படத்தில் நடித்து கொண்டிருக்கும் இவர் ஆசிர்வாதத்தோடு திரும்பி வந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.
எல்லாம் போகட்டும், AAA படமாவது அவருக்கு மகிழ்ச்சியை தரட்டும்.
n5




