செய்திகள்

சிம்பு காயம் படப்பிடிப்பு தள்ளி வைப்பு….

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் படம், ‘அச்சம் என்பது மடமையடா’. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது.

நேற்று முன் தினம் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

ஸ்டன்ட் சில்வா காட்சியை அமைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிம்புவின் முகம் மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் சிகிச்சை அளித்து, ஓய்வு எடுக்கக் கூறினர்.

இதன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

N5