சிம்பு மீது பணம் மோசடி புகார்
சிம்பு இப்போது AAA படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படமும் இறுதி கட்ட வேலைகளில் இருக்கிறது. இந்நிலையில் சிம்பு மீது லிங்குசாமி பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி விசாரிக்கையில், லிங்குசாமி, சிம்புவை வைத்து படம் இயக்கி, தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். அதன்படி சிம்புவுக்கு முன்பணமாக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் லிங்குசாமியால் அப்படத்தை தொடங்க முடியவில்லை.
இதனால் லிங்குசாமி தன் பணத்தை திருப்பி கேட்க, சிம்புவோ பணம் எல்லாம் திருப்பி தரமுடியாது, வேண்டுமென்றால் படம் எடுங்கள் என்று கூறியுள்ளாராம்.
இந்த நிலையில் வேறு வழியில்லாமல் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளார்.
N5




