அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் தேசத்தின் வெளிவிவகார கொள்கையை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்ககை வகிக்கின்றார்கள் என்பதால்- அமெரிக்க மக்கள் யாரை தங்கள் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது.
ஜோன்சனையும் வியட்நாமையும் சிந்தித்துப்பாருங்கள்,புஸ்களையும் வளைகுடாவையும் சிந்தித்து பாருங்கள்?
தேர்தல் வாக்களர்களிற்கு உண்மையான வாய்ப்பை வழங்குகின்றது,அமெரிக்காவின் இரு பிரதான வேட்பாளர்களினது வெளிவிவகார கொள்கைகளும் மாறுபட்டவை, உலகபாதுகாப்பு ஓழுங்கை பேணுவதே முக்கியமானது என ஹிலாரி கருதுகின்றார், அதன் மூலம் அமெரிக்காவும் நன்மையடையும் என்பது அவர் நிலைப்பாடு.
டொனால்ட் டிரம்பின் வெளிவிவகார கொள்கை கொடுங்கல்வாங்கல்களை அடிப்படையாக கொண்டது, அவர் வர்த்தக அடிப்படையில் உறவுகளை ஏற்படுத்தப்போவதாக தெரிவிக்கின்றார்,கடந்த காலங்களில் அமெரிக்காசெய்துகொண்ட வரலாற்று உடன்பாடுகள் மூலம் அமெரிக்காவிற்கு அதிக இலாபம் கிடைக்காவிட்டால் அவற்றை இரத்துச்செய்யப்போவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஐஎஸ்
இருவேட்பாளர்களும் ஐஎஸ் அமைப்பை சர்வதே பயங்கரவாதமாகவும் தோற்கடிக்கப்பட வேண்டியதாகவும் கருதுகின்றனர்.
ஹிலாரி தற்போது ஓபாமா பின்பற்றுவதையே தானும் பின்பற்றப்போவதாக தெரிவிக்கின்றார்,மாறாக டொனால்டிரம்ப் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கை எடுப்பேன் குண்டுவீசியே அழித்துவிடுவேன் என்கிறார்.
ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக ஆச்சரியமூட்டும் தீடீர் தாக்குதல்களை அமெரிக்க மேற்கொள்ளவில்லை என குறிப்பிடும் அவர் மொசுல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும விதத்தை விமர்சிக்கின்றார்.
இரு வேட்பாளர்களும் பயன்படுத்தும் வார்த்தைகள் வேறுபட்டவையாக காணப்படலாம் ஆனால் அவர்கள் இருவரும் ஓரே தந்திரோபாயத்தையே முன்வைக்கின்றனர்.
இருவரும் மேற்குலகின், அராபிய நாடுகளின் உதவியுடன் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் இருவரும் அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை, டிரம்ப் ஆரம்பத்தில் இது குறித்து பேசினாலும் தற்போது அமெரிக்க தரைப்படையை அனுப்புவது குறித்து எதனையும் தெரிவிப்பதில்லை.
டிரம்ப் ஓரு முக்கிய விடயத்தில் பாரிய வேறுபாட்டை கொண்டுள்ளார், அது ரஸ்யாவுடன் ஓத்துழைப்பது தொடர்பானது,ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் அதிகளவு இணைந்து பணியாற்ற அவர் தயாராகவுள்ளார், மேலும் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் உறுப்பினர்களிடமிருந்து உண்மைகளை அறிந்துகொள்வதற்காக கடுமையான சித்திரவதைகளை பயன்படுத்தலாம் என்கிறார் அவர்.
சிரியா
சிரியா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை ஹிலாரி ஆதரிக்கின்றார், டிரம்ப் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை,அகதிகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தும் திட்டத்தை அவர் ஆதரிக்கவில்லை, மாறாக அரபுநாடுகள் அதனை செய்யட்டும் என்கிறார்.
மேலும் ஓபாமா அரசாங்கம் சிரியா ஜனாதிபதி அசாத் பதவிவிலக வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தி வருகின்றது, சிரியா ஜனாதிபதியை பதவிகவிழ்ப்பதால் ஆபத்துக்கள் உள்ளது என்பதை ஓபாமா ஏற்றுக்கொண்டாலும் அதேவேளை அவர் சிரியா அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிற்கு ஆயுதங்களை வழங்கிவருகின்றார்,சமாதான பேச்சுக்களிலும் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றார், மத்தியகிழக்கின் மிகப்பெரும் ஆபத்தான சக்தி சிரியா ஜனாதிபதி அசாத் என்பது ஓபாமா கருத்து.
ஆசாத் அரசாங்கமே ஐஎஸ் உருவாகுவதற்கான சூழலை ஏற்படுத்தியது, அரசாங்கத்தை மாற்றினால் ஐஎஸ் போன்ற அமைப்பு ஏற்படுவதற்கான சூழல் மாற்றியமைக்கப்படும் என்பது ஓபாமா நிலைப்பாடு , இதனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவர் விரும்புகின்றார்- ஹிலாரி இந்த விடயத்தில் மேலும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கலாம்,
ஹிலாரி ஜனாதிபதியானால் விமானசூன்ய வலயங்களை ஏற்படுத்துவார்( விமானங்கள் பறப்பதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி) என்பது பரவலான எதிர்பார்ப்பு.இதன் மூலம் அவர் ரஸ்யா மற்றும் சிரியா விமானங்களுடன் மோதலாம்.
ஹிலாரி வெளிப்படையாகவே சிரியா கிளர்ச்சிக்காரர்களிற்கு ஆயுதங்களை வழங்கலாம்,
அதேவேளை டிரம்ப் சிரியா ஜனாதிபதி ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போராடி வருகின்றார், அவரை பதவி கவிழ்த்தால் புதிய ஆபத்துக்கள் உருவாகும் என்கிறார்.