சிரியா மற்றும் ஈராக்கில் ஐ. எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நிர்மூலம் செய்யப்பட்டுவரும் புராதன காலத்து பொக்கிஷங்களின் படங்கள்
சிரியாவின் பல்மிரா நகரத்தை தம் வசம் வைத்திருக்கும் ஐ. எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய சிலைகள் உட்பட அரும்பெரும் பொக்கிஷங்களை நிர்மூலம் செய்து வருகின்றனர். பாரிய சுத்தியல்கள் மற்றும் ஆயுதங்களின் மூலம் இந்த பொக்கிசங்களை இவர்கள் நிர்மூலம் செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியிட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு ஆறு அரிய சிலைகளை அலெப்போ மாகாணத்தினூடாக கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவரை கடந்த வியாழக்கிழமை அன்று ஐ. எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைதுசெய்துள்ளனர். இதேபோல, ஈராக்கின் பல புராதன நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் அங்கும் புராதன கட்டடங்கள், சிலைகள் , ஓவியங்களை நிர்மூலம் செதுவருகின்றனர்.
இவ்வாறு ஐ. எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் நிர்மூலம் செய்யப்பட்டுள்ள சில அரிய புராதன கால பொக்கிஷங்களை கீழே காண்கிறீர்கள்.

2000 வருடங்கள் பழமை வாய்ந்த யுனெஸ்கோவினால் பாரம்பரிய பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள பல்மிரா நகரை கைப்பற்றியுள்ள ஐ. எஸ்.ஐ.எஸ் அமைப்பு அங்கு இரண்டு புராதன பள்ளிவாசல்களை நிர்மூலமாக்கி இருக்கிறது.

கிறிஸ்துவுக்கு முன்னர் 883 இல் முடிசூடிய இரண்டாவது அசுர்ணசிர்பால் (Ashurnasirpal II ) மன்னனின் அசிரியன் நகர மாளிகை.

அசிரியன் நகரின் நூதனசாலையில் உள்ள புராதன கற்சிலை ஒன்றை ஐ. எஸ்.ஐ. எஸ் பயங்கரவாதி ஒருவன் நிர்மூலம் செய்யும் காட்சி.

ஈராக்கின் மொசூலில் உள்ள நூதன சாலையில் உள்ள புராதன சிலை ஒன்றை ஐ. எஸ்.ஐ. எஸ் பயங்கரவாதிகள் நிர்மூலம் செய்யும் காட்சி.

கிறிஸ்துவுக்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் வடக்கு இஸ்ரேல் இராச்சியத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசி (நபி) ஜொனா புதைக்கப்பட்ட பள்ளிவாசல் மொசூலில் உள்ள இந்த பள்ளிவாசலில் தான் புதைக்கப்பட்டது. ஐ. எஸ்.ஐ. எஸ் பயங்கரவாதிகளினால் இடித்து தலை மட்டமாக்கப்படுவதற்கு முன்னரான பள்ளிவாசலின் தோற்றம்.











