செய்திகள்

சிறந்த நிதி அமைச்சராக தெரிவான ரவி : விருது பெற பிரிட்டனுக்கு பயணம்

பிரிட்டனிலிருந்து வெளியாகும் ‘தி பேங்கர்’ சஞ்சிகையினால் ஆசிய வலயத்தில் சிறந்த நிதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அது தொடர்பாக நடத்தப்படும் விருது வழங்கல் விழாவில் கலந்துக்கொள்வதற்காக இன்று பிரிட்டனுக்கு பயணமாகவுள்ளார்.
குறித்த விருது வழங்கல் விழா எதிர்வரும் 24ஆம் திகதி பிரிட்டனிலுள்ள ‘தி பேங்கர்’ சஞ்சிகை தலைமையகத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இன்று அவர் அங்கு பயணமாகவுள்ளதாக நிதி அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் நிதி அமைச்சர்கள் தொடர்பாக ஆய்வுகளை நடத்தியுள்ள ‘தி பேங்கர்’ சஞ்சிகை 2017ஆம் ஆண்டுக்கான ஆசிய பிராந்தியத்தில் சிறந்த நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்கவின் பெயரை அறிவித்திருந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி , அதனை நிலையாக பேணும் முறை , சிறந்த நிதி கையாளுகை , வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டே ஆசிய பிராந்தியத்தில் சிறந்த நிதி அமைச்சராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி உலக நாடுகளில் சிறந்த நிதி அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)