சிறப்பாக நடைபெற்ற லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய தேர்த் திருவிழா (படங்கள்)
லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்தும் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்ற அதேவேளை பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பால் குடங்களை எடுத்துச் சென்றனர்.
ஆலயத்துக்கு அருகில் இருக்கும் பூங்காவில் வர்த்தக நிறுவனங்கள் இலவச தாக சாந்தி நிலையங்களை அமைத்து இருந்ததுடன் பல நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்திருந்தனர். (படங்கள்: பிறேமலதா பஞ்சாட்சரம்)
https://www.youtube.com/watch?v=T5aJnTW9T9A&feature=youtu.be




























