சிறப்பாக நடைபெற்ற ‘2017 லண்டன் தமிழர் சந்தை’: 10,000 க்கும் அதிகமான மக்கள் பங்கெடுப்பு
பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான “லண்டன்தமிழர் சந்தை” நிகழ்வு பிரமாண்டமான முறையில் நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.
ஏப்பிரல் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் Harrow Leisure Centre இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் 10,000 க்கும் அதிகமானமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் முதல் நாளன்று காணொளி மூலம் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் நீதியரசர்விக்னேஸ்வரன் பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் போன்று ஏனைய நாடுகளிலும் தமிழ் மக்களின்வர்த்தக வியாபார செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொருட்டும் வலுப்படுத்தும் பொருட்டும்நிறுவனமயமாக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டதுடன் இந்தஅமைப்புக்கள் யாவும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில் முதலீடுகள்மற்றும் வர்த்தக செயற்பாடுகளை மேற்கொண்டு பொருளாதார அபிவிருத்திக்கு பணியாற்றவேண்டும் என்றுவேண்டுகோள் விடுத்தார்.
லிபரா நிறுவனத்தின் சக ஸ்தாபகரான ரதீசன் யோகநாதன் இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். ” லண்டன் தமிழர் சந்தை” வெற்றிகரமாக நடத்தப்படுவது குறித்தும் ஆயிரக்கணக்கானபிரித்தானியா வாழ் தமிழ் மக்களை இந்த நிகழ்வு கவர்ந்திருப்பது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம். திருவாசகம் தனது உரையில், இந்த நிகழ்வு தொண்டர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்றுவருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன் 10,000 க்கும் அதிகமான தமிழ் வர்த்தக முயற்சியாளர்கள் பிரித்தானியாவிலே இருப்பதாகவும் இவர்கள்பிரித்தானியாவின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்களுக்கு பெருமளவு பங்களித்திருப்பதாவும் குறிப்பிட்டதுடன் இவர்கள் அனைவரையும் பிரித்தானியாவில் தமிழ் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு இணையுமாறு வேண்டுகோள் விடுத்தார். பல மாதங்களாக பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின்செயற்குழு உறுப்பினர்களின் கடுமையான உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் பாராட்டுதெரிவித்தார்.
முன்னாள் லண்டன் ஹரோ நகர பிதா சுரேஷ் கிருஷ்ணா உட்பட பல அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சென்னை ஆச்சி மசாலா நிறுவன உப தலைவர் கே ஆர் பி நாராயணன் , கொழும்பு Blue Ocean Group தலைவர்துமிலன் உட்பட ஏராளமான இளம் வர்த்தக முனைவோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமைகுறிப்பிடத்தக்கது.
130க்கும் அதிகமான தமிழ் வர்த்தக முனைவோர்கள் இந்த சந்தையில் தமது பொருட்கள் மற்றும் சேவைகளைகாட்சிப்படுத்தி இருந்தனர். 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் தொடர்ந்துவெற்றிகரமாக வருடாவருடம் நடைபெற்று வரும் இந்த நிகழ்வை அடுத்த ஆண்டு மேலும் பிரமாண்டமானஅளவில் விரிவுபடுத்தி செய்வதற்கு திட்டமிடுவதாகவும் திருவாசகம் தெரிவித்தார்.
நிகழ்வின் இரு தினங்களும் பல்வேறு கேளிக்கை, விநோத, ஆடல், பாடல் மற்றும் ஆடை அலங்கார நிகழ்வுகள்நடைபெற்றன. ஆனந்த் மற்றும் ராகா இசைக்குழுவினர் இசை நிகழ்வுகளை சிறந்த முறையில்வழங்கியிருந்தனர். லிபரா நிறுவனம் இந்த நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை வழங்கியிருந்தது.
உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையாளராக IBC ஊடக நிறுவனம் செயற்பட்டது. BTM, Ruby’s Catering மற்றும் Carlton Leisure ஆகிய நிறுவனங்களும் இந்த நிகழ்வின் அனுசரணையாளர்களாக செயற்பட்டன. Longtek, Berkeley Private Wealth, JNL, Links Legal, Conversation TV, Green Tree Pulses, Accountancy Group ஆகிய நிறுவனங்களும்அனுசரணையை வழங்கியிருந்தன.
இம்முறை நிகழ்வில் கீழ்வரும் வர்த்தக முனைவோர்கள் பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தினால்கௌரவப்படுத்தப்பட்டனர்: கோபி யோகரத்தினம் ( Tamil Hindu Weddings), நெல்சன் சிவலிங்கம் (HowNow), றொபேர்ட் ராஜேஸ்வரன்( GoCode), கரன் சண்முகராஜா( WealthKernel), ஜோன் ரெமிஜியூஸ் ( iEnergy), ரிச்சர்ட் கிரு (Christopher Lily), சுஜிதா நரேந்திரா( AKN Jewellery), சுபி சுதர்ஷன்( Casipillai Designer Saree), விஜிதா நிர்மலன் ( Shriba Creations), கவினோ நகுலேந்திரன் ( MYA Media), சுஜிதா முகுந்தன் ( Vadivu Hair & Make up) மற்றும் தீபா அகிலன்(Vadivu Saree).