செய்திகள்

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் “ஏறுது பார் கொடி ஏறு­து­பார்” என தமி­ழீழத் தேசிய கீதம் இசைப்பு

யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத் தலை­வர் கி.கிருஸ்­ண­மே­னன் தலை­மை­யில் நேற்று பொங்­கு­த­மிழ் நினை­வுத் தூபி திறக்­கப்­பட்­டது. திரை நீக்­கப்­பட்­ட­ தும் தமி­ழீழ விடு­த­லைப் புலி ­க­ளி­னால் வெளி­யி­டப்­பட்ட தேசிய கீத­மான ”ஏறுது பார் கொடி ஏறு­து­பார்” என்­கிற பாடல் ஒலி­ப­ரப்­பப்­பட்­டது. தொடர்ந்து புலி­க­ளின் எழுச்­சிக் கீதங்­க­ளும் ஒலி­ப­ரப்­பப்­பட்­டன.நினை­வுத் தூபி திறக்­கப்­பட்­ட­போது புரட்சி கீதங்­கள் இசைக்­கப்­பட்­டன. நிகழ்­வில் பல்­க­லைக்­க­ழக பதி­வா­ளர், விரி­வு­ரை­யா­ளர்­கள், பணி­யா­ளர்­கள், மாண­வர்­கள் மற்­றும் பொது மக்­கள் எனப் பலர் கலந்­து­கொண்­ட­னர்.

தமிழ் மக்­க­ளின் அபி­லா­சை­க­ளான சுய­நிர்­ணய உரிமை, மர­பு­வ­ழித் தாய­கம், தமிழ்த் தேசி­யம் என்­பவை அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டும் எனப் பிர­க­ட­னப்­ப­டுத்தி 2001 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 17 ஆம் திகதி பன்­னாட்­டுச் சமூ­கத்தை தமி­ழர் தேசத்­தின் பக்­கம் திருப்­பும் வகை­யில் யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தால் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு நடத்­தப்­பட்­டது.

அதன் நினை­வாக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக வளா­கத்­தில் நினை­வுப் பலகை அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்­தப் பலகை அகற்­றப்­பட்­டுத் தற்­போது நினை­வுத் தூபி கட்­டப்­பட்­டுள்­ளது. இந்த ஏற்­பாட்­டைப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் மேற்­கொண்­டி­ருந்­தது.(15)