செய்திகள்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கானுக்கு பிணை!

தோஷகானா ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பை அறிவித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான தோஷகானா ஊழல் வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து இம்ரான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-(3)