சிவகரன் பிணையில் விடுதலை: வெளிநாடு செல்வதற்குத் தடை
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், சாவகசேரி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வெளிநாடு செல்ல முடியாது என்ற நிபந்தனையுடனேயே சிவகரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பகுதியில் நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சிவகரன் வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசராணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற விசாரணைகளை தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் , வழக்கு முடிவடையும் வரையில் வெளிநாடு செல்ல முடியாது அவ்வாறு செல்ல வேண்டிய தேவை ஏற்படின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அனுமதியினை பெற்று செல்ல முடியும்.
அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனும் நிபந்தனைகளுடன் நீதவான் பிணையில் செல்ல அனுமதித்தார்.
R-06




