சிவகார்த்திகேயனை காப்பாற்ற நினைக்கும் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் தற்போது போட்டி நடிகர்களாக கூறப்படுபவர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரை தான்.
ஆனால் இவர்களுக்குள் எந்த போட்டியும் இல்லாமல் தான் இருக்கிறார்கள். அண்மையில் விஜய் சேதுபதி றெக்க டிரைலரில் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே பட போஸ்ஸை கொடுத்திருந்து தங்களது நட்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சிவாவின் ரெமோ படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதியின் றெக்க படமும் வெளியாக இருக்கிறதாம்.
சிவகார்த்திகேயனின் ரெமோ படம் வெளியாகும் அதே நாளில் விஜய் சேதுபதியின் றெக்க வெளியாக இருப்பதால் தயாரிப்பாளரிடம் தன்னுடைய றெக்க படத்தை வேறொரு நாளில் ரிலீஸ் செய்ய பேசி வருகிறாராம்.
N5




