சிவனொளிபாத மலைப் பகுதியில் ஹோட்டல் திட்டம் : தடுத்து நிறுத்தப்படுமா?
சிவனொளிபாத மலைக்கு அன்மித்த பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஹோட்டல் திட்டத்தால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக சுற்றாடல் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹோட்டல் திட்டம் தொடர்பாக அண்மையில் குழுவொன்று ஹெலிகப்டர் மூலம் குறித்த பகுதிக்கு சென்று ஆராய்ந்துள்ள நிலையிலேயே குறித்த ஹொட்டல் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் மரே நீர்வீழ்ச்சியை அன்மித்த பகுதியில் தனியார் இடமொன்றிலேயே இந்த ஹோட்டல் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த திட்டத்திற்கு பின்னால் பிரபல அமைச்சர் ஒருவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இதனால் அந்த பிரதேசத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென சூழலியலாளர்கள் தெரிவித்து வரும் அதேவேளை பிரதேசவாசிகளும் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் சுற்றாடல் அமைச்சு இது தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




