சிவனொளிபாத மலையில் பிளாஸ்ரிக் போத்தல் , பொலித்தீனுக்கு தடை
சிவனொளிபாத மலை பிரதேசத்திற்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்கள் கொண்டு செல்வதனை தடை செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவக்காலம் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பாக நேற்று நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலின போது நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி மலைப்பகுதிக்கு யாத்திரிகர்கள் பிளாஸ்ரிக் போத்தல்களை கொண்டு செல்ல முடியாது என்பதுடன் அங்குள்ள விற்பனை நிலையங்களிலும் அது தடை செய்யப்படுமென அவர் தெரிவித்துள்ளார். -(3)




