செய்திகள்

சிவாஜிலிங்கத்திடம் விசாரணை!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆளும் கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் நவம்பர் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட வடக்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கத்தை வல்வெட்டித்துறை பொலிஸுக்கு வருமாறு அழைப்பு விடுத்தபோதிலும், தனக்கு உடல்நிலை சரியில்லை என அவர் அறிவித்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழத் தலைவராகக் கருதப்பட்டதாகவும், அதனால் அவரது பிறந்த திகத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம். கே. சிவாஜிலிங்கம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

-(3)