செய்திகள்
சீனக் கப்பல் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து வெளியேறும்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீனாவின் ஆய்வுக் கப்பல் இன்று மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று மாலை குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர் மாஸ்ட்டர் கப்பல் தலைவர் நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன கப்பல் கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தது.
இந்தக் கப்பல் வந்தமை தொடர்பில் இந்தியா அதிருப்த வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)




