சீரற்ற வானிலை: கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தளவுக்கும் , கொச்சிக்கும் திருப்பப்பட்டன
சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவும் இன்று காலையும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த விமானங்கள் சில அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் மற்றும் இந்தியா கொச்சி விமான நிலையங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
நேற்று இரவு 8.45க்கும் மற்றும் இன்று அதிகாலையும் டுபாயிலிருந்து வந்த இரண்டு விமானங்களும் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
அத்துடன் மேலும் சில விமானங்கள் இந்தியா கொச்சி விமான நிலையத்திற்கும் திருப்பிவிடப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
R-06




