செய்திகள்
சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் ஊடுருவி தாக்குதல்
சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இனந்தெரியாத குழுவொன்று அந்த இணையத்திற்குள் ஊடுருவி அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை ஹெக் செய்தோர் அந்த இணையத்தில் hacked by mr z என்ற அறிவித்தல் பெனர் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவிலிருந்து ஹெக் செய்தது போன்று அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.-(3)




