செய்திகள்

சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்­து­வதில் எந்த சவால்கள் வந்தாலும் அஞ்சப் போவதில்லை: மைத்திரி உறுதி

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்­து­வதில் எந்த சவால்கள் வந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை. அதற்கான அடித்தளம் இன்று காலி மே தினத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவித்தார்.

நேற்று காலியில் இடம்­பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மே தின பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட­வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் ஜனா­தி­பதி உரையாற்றுகையில் தெரிவித்தது:
69
“1956 களிலும் 1960 களிலும் வடக்­கி­லி­ருந்து சமஷ்டி வேண்­டு­மென்ற குரல் ஒலித்­தது. அதே­போன்று 26 வரு­ட­காலம் நாட்டில் பயங்­கர யுத்­தமும் நில­வி­யது. எனவே சமஷ்டி தேவை என்ற குரல் ஏன் வடக்­கி­லி­ருந்து ஒலித்­தது. அதே­போன்று ஏன் 26 வரு­ட­கால யுத்தம் நாட்டில் ஏற்­பட்­டது? என்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்டும். அது தொடர்பில் ஆராய வேண்டும்.

அத்­தோடு ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் ஒற்­றை­யாட்­சிக்குள் நாம் தீர்வு காண வேண்டும். அதற்­காக நாம் இன, மத, குல, அர­சியல் பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு தேசிய நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த வேண்டும்.
68
இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு இலங்­கைக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை விதிக்கும் ஆரம்­ப­கட்­ட­மாக இலங்­கை­யி­லி­ருந்து கட­லு­ணவுப் பொருட்­களை ஐரோப்பிய நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வதை ஐரோப்­பிய ஒன்­றியம் தடை­செய்­தது. அதே­போன்று ஆடை தொழிற்­து­றைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கையும் தடை செய்­யப்­பட்­டது. இவையனைத்தும் இலங்­கைக்கு எதி­ரான பொரு­ளா­தார தடை­யினை விதிப்­ப­தற்கு முன்­னேற்­பா­டு­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்­டன.
67
ஆனால் இன்று எமது முயற்­சி­யினால் ஐரோப்­பிய ஒன்­றியம் தனது தடை­யினை நீக்­கி­யுள்­ளது. இது தொடர்­பான விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் இன்று நள்­ளி­ரவு 12.00 மணிக்கு (நேற்று) அர­சாங்­கத்தால் வெ ளியி­டப்­ப­ட­வுள்­ளது. அதே­வேளை தடை­வி­திக்­கப்­பட்ட ஜீ.எஸ்.்பி. வரிச்­ச­லு­கையும் இன்னும் இரண்­டொரு வாரங்­களில் மீண்டும் எமக்கு கிடைக்­க­வுள்­ளது.

அத்­தோடு உலக நாடுகள் பேத­மில்­லாமல் இன்று எமது அபி­வி­ருத்­திக்கு உதவி புரிய முன்­வந்­துள்­ளன. இது எமது அர­சாங்­கத்­திற்கு கிடைத்த வெற்­றி­யாகும். இலங்கை வர­லாற்றில் முதல் முறை­யாக ஜீ– 7 பொரு­ளா­தார மாநாட்­டிற்கு கலந்து கொள்­வ­தற்­கான அழைப்பு இலங்கை ஜனா­தி­ப­திக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இது எமக்கு கிடைத்த நல்ல சந்­தர்ப்­ப­மாகும். இது எமது நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு மேலும் உத­விகள் கிடைக்கும் சந்­தர்ப்­ப­மாக அமையும்.
66
ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்­து­வதில் எந்த சவால்கள் வந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை. அதற்கான அடித்தளம் இன்று காலி மே தினத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றார்.
R-06