செய்திகள்

சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பு செய்ய தீர்மானம் : மஹிந்த அமரவீர தெரிவிப்பு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியை பிளவுபடுத்தினால் அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கே நன்மை கிடைக்கும். இதனை கட்சியின் 99 வீதமான உறுப்பினர்கள் புரிந்துக்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் அவர்கள் கட்சியை பிளவு படவிட மாட்டார்கள். இந்நிலையில் தற்போது கட்சியை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர் அணி மற்றும் மகளீர் அணிகள் இதன் மூலம் மேலும் பலப்படுத்தப்படவுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10