செய்திகள்

சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள மாட்டேன் : மகிந்த அறிவித்தார்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் தான் கலந்துக்கொள்ள மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
தான் அந்தக் காலப்பகுதியில் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் இதன்படி அந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது வெளிநாட்டு பயணம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)