செய்திகள்

சுதந்திரக் கட்சி மாநாட்டில் ரணிலே பிரதம விருந்தினர்

எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டிற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதம விருந்தினராக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.தே.கவின் மாநாட்டுக்கு பிரதம விருந்தினராக சு.க தலைவர் ஜனாதிபதியை அவர்கள் அழைத்ததை போன்று நமது மாநாட்டுக்கு அவர்களை அழைப்போம் என ஜனாதிபதி கட்சியினரிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  -(3)