சுதந்திர தினத்தன்று கறுப்புப் பட்டி போராட்டம்
ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து சுதந்திர தினமான சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சனிக்கிழமை 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் விடயம் பதில் கூறு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், மீளக் காணிகள் சுவீகரிக்கப்படக் கூடாது, இனப்படுகொலைக்கு நீதி, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காலை 8 மணிமுதல் 10 மணிவரை அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
அதேவேளை தற்போதை ஆட்சியிலும் யாழில் 1505 எக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறினார்.
n10




