சுதந்திர தின நிகழ்வை பகிஷ்கரிக்க எதிர்க்கட்சித் தலைவர் முடிவு!
தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வேண்டாம் என கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு இடமில்லை என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பல்வேறு தொழில் வல்லுநர்கள் கறுப்புப் பட்டி அணிந்து வீதிகளில் இறங்கியுள்ளதாகவும், நாட்டு மக்கள் இன்னல்களுக்கு உள்ளாவதால் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-(3)




