செய்திகள்

சுமந்திரன் – நாமல் சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரனுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள சுமந்திரனின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்போது வடக்கு கிழக்கில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழரசு கட்சியுடன் தான் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ஷ சுமந்திரனிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

-(3)