சுமந்திரன் மீதான கொலை முயற்சிக்கு கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் மீதான கெலை முயற்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் விடுதலைலப்புலிகளின் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமெனவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் பேச்சாளரான நிசாந்த ஶ்ரீ வர்ணசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அப்போது ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பே இந்த கொலை முயற்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவத்தை பார்க்கும் போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. இதனால் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். கடந்த காலங்களில் 1200 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் அவர்களின் அச்சுறுத்தல் நாட்டில் இருக்கின்றன. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




