செய்திகள்

சுருதிஹாசன் ஜோடியாக ஹாலிவுட் நடிகர்

கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தில் முதன்முறையாக தந்தை கமலுடன் இணைந்து சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

கமலுக்கு அடிபட்டதால் தடைபட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘சபாஷ் நாயுடு’வில் சுருதிக்கு ஜோடியாக யார் நடித்து வருகிறார்கள்? என்பது இதுநாள்வரை சஸ்பென்சாகவே இருந்தது.

தற்போது அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. ‘சபாஷ் நாயுடு’வில் சுருதிஹாசன் ஜோடியாக ஹாலிவுட் நடிகர் மனு நாராயணன் நடித்து வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த மனு நாராயணன் தமிழில் நடிக்கும் முதல் படம் ‘சபாஷ்நாயுடு’ என்பது குறிப்பிடத்தக்கது.

N5