செய்திகள்
சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டது!
சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த அமைச்சுப் பதவிக்கு நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வகித்த அமைச்சுப் பதவியை ஜனாதிபதி தனக்கு கீழ் கொண்டு வந்துள்ளார்.
-(3)




