செய்திகள்

சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு ஆணுறைகளை விநியோகிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

இலங்கை சுற்றுலாத்துறையில் பணியாற்றுபவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகி வருவதாகவும் இதனால் அவர்களுக்கு ஆணுறைகளை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புத்திக்கபத்திரனவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோரில் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலாத்துறையில் வழிகாட்டிகளாக பணியாற்றுவோரே அதிகமாக இந்தத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதன்படி அவர்களுக்கு ஆணுறைகளை விநியோகிக்க நடவடிக்கையெடுத்துள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)