செய்திகள்

சு.கவின் மேதின கூட்டத்திற்கு மஹிந்தவுக்கு அழைப்பு : ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்திற்கே போவேன்- மஹிந்த

ஶ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியினால் காலியில் நடத்தப்படவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தனக்கு முதலில்  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலிருந்தே அழைப்பு கிடைத்துள்ளதாகவும் இதன்படி அவர்களின் கூட்டத்திற்கே தான் செல்வேன் என இன்று கொழும்பில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

n10