செய்திகள்

சு.கவின் மேதின கூட்டம் கண்டியில்

இம்முறை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை கண்டியில் நடத்துவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் உபதலைவரும் மேதின ஏற்பாட்டுக்குழுவின் தலைவருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி நகரில் மேதின கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான பேரணிகளை பேராதனை பகுதியிலிருந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)