சு.க அமைச்சர்கள் தொடர்பாக ஐ.தே.கவினர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு
அமைச்சர்கள் இருவர் தொடர்பாகவும் மற்றும் முதலமைச்சர் ஒருவர் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
அந்த 2 அமைச்சர்களும் சுசில் பிரேமஜயந்த மற்றும் டிலான் பெரேரா என்பதுடன் முதலமைச்சர் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வெளியும் கருத்து மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை விமர்சிப்பது தொடர்பாகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




