செய்திகள்

சு.க. எம்.பி.க்கள் பங்கேற்ற மஹிந்த அணியினரின் தினக் கூட்டம்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொது எதி­ரணி என அழைக்­கப்­படும் மஹிந்த அணியின் மேதினக் கூட்டம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் கிருலப்­பனை லலித் அத்­துலத் முதலி மைதா­னத்தில் நடை­பெற்­றது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
72
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட மே தினப் பேர­ணி­யா­னது நேற்­றைய தினம் கொழும்பு நாரா­ஹேன்­பிட்ட பார்க்­வீ­தியில் அமைந்­துள்ள சாலிக்கா மைதா­னத்தில் ஆரம்­பிக்­கப்­பட்டு, பென்மன்ட் வீதி­யி­னூ­டாக கிரு­லப்­பனை சந்தி ஐ லவல் வீதி­யி­னூ­டாக லலித் அத்­து­லத்­மு­தலி மைதா­னத்தை வந்­த­டைந்­தது.

“மக்கள் போராட்­டத்­திற்கு உயிர் கொடுக்­கவும், மக்கள் விரோத ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக ஒன்­றி­ணைவோம் ” என்ற தொனிப்­பொ­ருளில் இந்த கூட்டம் நடை­பெற்­றது.
71
கூட்டு எதி­ர­ணியின் இந்த மேதின பேர­ணியில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான டலஸ் அழ­கப்­பெ­ரும, சி.பி. ரத்­னா­யக்க, பவித்­திரா வன்­னி­யா­ராச்சி, மஹிந்­தா­னந்த அழுத்­கமே, ரோஹித அபே­கு­ண­வர்­தன, பிர­சன்ன ரண­துங்க, நாமல் ராஜ­பக்ஷ உள்­ள­டங்­க­ளாக பல்­வேறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டனர்.

அத­னுடன் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான உத­ய­கம்­மன்­பில, தினேஸ் குண­வர்­தன, விமல் வீர­வம்ச உள்­ளிட்­டோரும், முன்னாள் அமைச்­சர்­க­ளான பஷில் ராஜ­பக்ஷ, ஜீ.எல். பீரிஸ் உள்­ளிட்­டோரும் கலந்து கொண்­டனர்.

நேற்­றைய தினம் நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து வரு­கை­தந்த ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பெருந்­தி­ர­ளான மக்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் உரு­வப்­ப­டங்­களை ஏந்­தி­ய­வாறும், அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி. விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவும் கோசங்­களை எழுப்­பி­ய­வாறும் பேர­ணியில் கலந்­து­கொண்­டனர்.
70
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக­மாக மகா­ஜன எக்சாத் பெர­முன, லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி, சோச­லிச மக்கள் முன்­னணி, தேசிய சுதந்­திர முன்­னணி, பிவித்­துரு ஹெல உறு­மய, ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி ஆகிய கட்­சிகள் கலந்­து­கொண்­டன.

அத்­துடன் தொழிற்­சங்க கூட்டு ஒன்­றியம், இலங்கை தொழி­லாளர் சம்­மே­ளனம், ஸ்ரீ லங்கா வர்த்­தக கைத்­தொழில் தொழி­லாளர் சங்கம், அர­ச­சேவை மற்றும் தொழிற்­சங்க கூட்­டி­ணைந்த சங்கம், இலங்கை அளவை உத­வி­யாளர் சங்கம், அகில இலங்கை அரச சாரதியினர் சங்கம், அரசாங்க பொது சேவை சங்கம், புகையிரத சேவை சங்கம், லங்கா தொழிலாளர் முன்னணி, பொது வைத்திய அதிகார சங்கம் ஆகியன பங்குபற்றியிருந்தன. ஊர்வலத்தின் இறுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.

இதில் கலந்துகொள்ளும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அடுத்த ஒரு இரு தினங்களுக்குள் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
R-06