சு.க தலைமைத்துவத்தை எதிர்ப்போருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க தீர்மானம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிப்போருக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கு அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
கடந்தக் காலங்களாக கட்சித் தலைவரான ஜனாதிபதிக்கு எதிராகவும் மற்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகவும் அந்தக் கட்சியை சேர்ந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலரால் விமர்சிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிடம் அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கட்சியின் செயற்குழுவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
N5




