செய்திகள்

சு.க மாநாடு தொடர்பான மகிந்த அணியின் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் கூட்டத்தை ஒத்தி வைக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
நேற்று மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூடியுள்ள நிலையில் அதன்போது கட்சி மாநாடு தொடர்பான தீர்மானத்தை சில தினங்கள் கழித்து மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  -(3)